பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விதந்துரைகளை மையப்படுத்தி அஜித் நிவார்ட் கப்ராலை கைது செய்து தடுத்து வைத்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமாதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டால் மத்திய வங்கியில் உள்ள சாட்சியங்களை அழிப்பதற்கு , மாற்றுவதற்கு, சாட்சியாளர்களை அச்சுறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டும் மனுதாரர் தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கப்ராலை கைது செய்து தடுத்து வைத்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளவும் நிதி சட்டத்தின் 12 ஆவது அத்தியாயத்துக்கு அமைய அவரை மத்திய வங்கியின் எந்தவொரு பதவிக்கும் நியமிக்க கூடாது. என ஜனாதிபதி செயலாளர், நிதியமைச்சருக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.