Our Feeds


Monday, September 20, 2021

Anonymous

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் 89 கைதிகள் விடுதலை? ரஞ்சனின் பெயரும் உள்ளதா?



கடந்த 12ஆம் திகதி சிறைக் கைதிகள் தினத்தன்று விடுதலை செய்யப்பட்ட 89 கைதிகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இந்தக் கைதிகள் அனைவரும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பளிக்குமாறு எதிர்கட்சித்தலைவர் உட்பட பலரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இருந்த போதிலும் அந்தக் கோரிக்கைக்கு இதுவரை ஜனாதிபதி எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »