Our Feeds


Saturday, September 25, 2021

Anonymous

623 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள்: மீள் பரிசீலனை அவசியம் என்கிறார் ஜனாதிபதியின் செயலாளர்!



(எம்.எப்.எம்.பஸீர்)


623 பொருட்களுக்கு இறக்குமதி உத்தரவாத தொகையை 100 சத வீதமாக அதிகரித்த இலங்கை மத்திய வங்கியின் தீர்மானம் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என முன்னாள் திறைசேரி செயலரும் தற்போதைய ஜனாதிபதியின் செயலருமான கலாநிதி பி.பீ. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் குறித்த நடவடிக்கையானது, கொவிட் -19 பரவலின் பின்னரான பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் அர்த்தமற்ற செயற்பாடு என வர்ணித்துள்ள அவர், அதனால் அதனை கண்டிப்பாக மீள் பரிசீலனைச் செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

‘எகொனொமி நெக்ஸ்ட்’ எனும் இணையத் தளத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர அளித்துள்ள விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,’ தகவல் தொழில்நுட்பம் என்பது ஏற்றுமதி வருமானத்தை சடுதியாக அதிகரிக்க உதவிவரும் ஒரு துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வருடம் தகவல் தொழில்நுட்பத்துறை ஊடாக 1.7 பில்லியன் டொலர் வருமானம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய வங்கி தகவல் தொழில்நுட்ப துறைக்கு அவசியமான பொருட்களுக்கு இறக்குமதி உத்தரவாத தொகையை 100 வீதமாக அதிகரித்துள்ளது. இது அர்த்தமற்றது என்பதுடன் ஆரோக்கியமானது அல்ல.

கொரோனா நிலைமையின் பின்னரான பொருளாதார வளர்ச்சி, பணப் புழக்கம் தொடர்பில் ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையே அவசியமாகும் நிலையில், கண்டிப்பாக இந்த இறக்குமதி வரம்புகள் மீளாய்வு செய்யப்படல் வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »