Our Feeds


Tuesday, September 21, 2021

Anonymous

அசாத் சாலியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒக்டோபர் 4 ஆம் திகதி பரிசீலனை!



(எம்.எப்.எம்.பஸீர்)


கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மனு மீதான பரிசீலனைகள் இன்று (21) உயர் நீதிமன்றில் நீதியர்சரகளான ப்ரீத்தி பத்மன் உரசேன, எஸ். அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் வந்தது.

இதன்போது, மனுவை தாக்கல் செய்த சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா மரணமடைந்துள்ளதால், வழக்கை முன்கொண்டு செல்ல பிறிதொரு சட்டத்தரணியை பெயரிட்டு தேவையான ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதியர்சரகள் குழாமின் தலைமை நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆலோசனை வழங்கினார்.

இந்நிலையில் அதற்கான கால அவகாசத்தையும் வழங்கிய நீதியரசர் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுப்பதாக அறிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »