Our Feeds


Tuesday, September 21, 2021

Anonymous

தாக்குப்பிடிக்க முடியாதளவுக்கு கடன் சுமை, 2029 ஆம் ஆண்டு வரை நெருக்கடி - இதற்கு கோடாவின் அரசு காரணமல்ல - அமைச்சர் பந்துல



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


கடன் நெருக்கடிக்கும் வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் போனமைக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவோ எமது அரசாங்கமோ காரணமல்ல. கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான வெளிநாட்டு கொள்கையும் அனர்த்தங்கள், கொவிட் நெருகடிகளே காரணம் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

நாடு மிகப்பெரிய வெளிநாட்டு செலாவணி நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்து வருகின்றது. இது வெறுமனே கொவிட் -19 வைரஸ் பரவல் காரணங்களின் தாக்கமாக மட்டும் கூறிவிட முடியாது. கடந்த 1977 ஆம் இருந்து கையாண்ட திறந்த பொருளாதார கொள்கையின் தாக்கமும், அதன் பின்னரான தேசிய உற்பத்தி மீதான குறைந்த நம்பிக்கையும், உற்பத்திகளை குறைத்து இறக்குமதியை மட்டுமே நம்பியமையும் இப்போது நெருக்கடி உருவாக காரணமாக அமைந்தது.

அதேபோல் தாக்கு பிடிக்க முடியாத அளவுக்கு அபிவிருத்தி கடன்களை பெற்றுள்ளோம். 2029ஆம் ஆண்டு வரையில் இந்த நெருக்கடிக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் போனமைக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் இதற்கு கோட்டாபய ராஜபக்க்ஷவோ எமது அரசாங்கமோ காரணமல்ல.

கடந்த கால தவறான வெளிநாட்டு கொள்கை, மற்றும் அனர்த்தங்கள், கொவிட் நெருகடிகளே காரணம். இதன் காரணமாகவே எம்மால் இவ்வாறான இறுக்கமான ஆட்சியை கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »