கொரோனா காலத்தில், கொரோனா தொற்று தொடர்பில் அதிகமான பொய் செய்திகளை பரப்பிய நாடுகளில் முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவும், மூன்றாவது இடத்தினை பிரேசிலும் பிடித்துள்ளன.
138 நாடுகளில் 2020 ஜனவரி 1 முதல் 2021 மார்ச் 1 வரை 15 மாதங்கள் நடத்தப்பட்ட ஆய்வில் 9,657 பொய்ச்செய்திகள் பரப்பப்பட்டுள்ளதாக ஆய்வை மேற்கொண்ட சேஜ் நூலக சங்கம், சர்வதேச கூட்டமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதற்கு சமூக வலைதளங்களே அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளதாகவும் மேற்கண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.