வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 104 வயது மூதாட்டி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மரணித்த 11 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா, மூனாமடு கிராமத்தைச் சேர்ந்த 104 வயது கதிரவேல் அமிர்தம் என்ற மூதாட்டியே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களில் அதிகூடிய வயதுடையவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.