Our Feeds


Tuesday, August 10, 2021

www.shortnews.lk

World Book of Records விருதுக்கு செந்தில் தொண்டமானின் பெயர் பல நாடுகளில் இருந்து பரிந்துரை.

 



உலகத்தரம் வாய்ந்த சர்வதேச சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான World Book of Records நிறுவனத்தால் வழங்கப்படும் சுகாதாரப் பணிகளுக்கான விருதுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமானின் பெயர் பல நாடுகளின் பிரதிநிதிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


World Book of Records என்பது உலகத்தரம் வாய்ந்த சர்வதேச சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். அதன் முதன்மை குறிக்கோள் உலக தரத்தின் செயல்பாடுகள் என்று அழைக்கப்படும் நிகழ்வுகளை பதிவு செய்தல், கௌரவித்தல், பட்டியலிடுதல், பாராட்டுதல், அங்கீகரித்தல் மற்றும் தீர்ப்பளித்தல் ஆகும்.


ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உலகளாவிய சான்றோர்கள் முன்னிலையில் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி அவர்களுடைய சாதனைகளை கௌரவிக்கிறது World Book of Records நிறுவனம்.


அறிவியல் , விளையாட்டு, கலை, தொழில்நுட்பம், சுகாதாரம் , சுற்றுச்சூழல் , சமூக மாற்றம் ஆகிய துறைகளில் சிறந்த சாதனையாளர்களை அடையாளப்படுத்தி அவர்களின் பணிகளை உலகறிய செய்கிறது World Book of Records நிறுவனம்.


இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், இலங்கையில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் முன்னெடுத்த கொவிட் பெருந்தொற்று பணி மற்றும் மக்களோடு மக்களாக களத்தில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டதற்காகவும் அவருடைய பெயர் World Book of Records விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »