மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண திஸாநாயக்கவிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சிக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.