நாட்டில் நேற்று (03) கொவிட் தொற்றால் 82 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,727ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்று தோன்றிய இடமாகக் கூறப்படும் சீனாவில் இதுவரையில் கொவிட் தொற்றினால் 4,636 பேர் உயிரிழந்துள்ளனர் என வேர்ல்டோமீற்றர் இணையதளம் குறிப்பிடுகிறது.
எனவே, நாட்டில் நேற்றுமுன்தினம் பதிவான 74 கொவிட் மரணங்களையடுத்து, மொத்த மரண எண்ணிக்கை 4,645 பதிவாகியது.
அதற்கமைய, மொத்த கொவிட் மரண எண்ணிக்கையில் சீனாவை இலங்கை விஞ்சியுள்ளதை அவதானிக்க முடிகிறது.