Our Feeds


Tuesday, August 17, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: பலவந்தமாக கொரோனா தடுப்பூசி ஏற்றுகிறார்கள் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அக்மீமன தேரர் முறைப்பாடு!

 



கொரோனா தடுப்பூசி ‍வேலைத்திட்டத்துக்கு அமைவாக பலாத்காரமாக கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்று சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரரினால் நேற்று (16) கையளிக்கப்பட்டது.


இது குறித்து அவர் கூறுகையில்,” கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும்படி அரசாங்கம் கட்டாயப்படுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும். தடுப்பூசி ஏற்றாதவர்கள் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடையென அரசாங்கம் எவ்வாறு கூற முடியும். ‍இந்த தடுப்பூசிகளுக்கு உத்தரவாதம் உள்ளதா?

இதனை ஏற்றிக் கொள்வதால் வைரஸ் தொற்று ஏற்படாதெனவும் மரணிக்கமாட்டார்கள் எனவும் உத்தரவாதம் உள்ளதா?

ஆகவே, கொரோனா தடுப்பூசி ‍வேலைத்திட்டத்துக்கு அமைவாக பலாத்காரமாக கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் எமது குழுவுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை கையளித்தோம்”என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »