நான்கு அமைச்சு பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதன்படி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவையும், வெளிவிவகார அமைச்சராக G.L.பீரிஸையும், ஊடகத்துறை அமைச்சராக டளஸ் அழகபெருமவையும், மின்சக்தி அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெலவையும் நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அமைச்சு பொறுப்புக்களில் மாற்றம், எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன