நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
ரிஷாத் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர் ஆகிய நால்வரும் தாக்கல் செய்த பிணை மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய டயகமைவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி மரணமடைந்ததையடுத்து கடந்த 23 ஆம் திகதி இந்நால்வரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.