Our Feeds


Monday, August 16, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: 20ஐ ஆதரித்த மு.க MP ஹாபிஸ் நசீர் உள்ளிட்ட சில முஸ்லிம் MP க்களுக்கும் அமைச்சுப் பதவிகள் - விபரம் வெளியானது.

 



அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட இன்றைய தினம் இராஜாங்க அமைச்சுக்கள் சிலவற்றிற்கும் அமைச்சர்கள் நியமிக்கப்படவிருந்தனர். ஆனால் அது பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு எம் பி ஹாபீஸ் நசீர் மற்றும் வன்னி எம் பி காதர் மஸ்தான் ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட ஆலோசிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்விற்கும் அமைச்சுப் பொறுப்பொன்றை வழங்க அரச மேல்மட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

ஆனால் முழு அமைச்சரவை மாற்றம் இன்று செய்யப்படாத காரணத்தினால் இவர்களை அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மட்டக்களப்பு எம் பி சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பொன்று வழங்கப்படவுள்ளது.

அடுத்த வாரங்களில் இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »