கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த கட்டில்களில் 1,200 கட்டில்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளர்களுக்காக நேற்று (08) வரை 33,962 கட்டில்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றில் 32,762 கட்டில்களில் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையை கையாள்வதற்கு மாற்றீடாக சாதாரண நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்கள், கொரோனா நோயாளர்களுக்காக பயன்படுத்தப்படலாம் எனவும், ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.