Our Feeds


Saturday, August 14, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: மத்திய மாகாணத்தில் தொடர்ந்து உயரும் கொரோனா மரணங்கள் - இதுவரை 1063 பேர் உயிரிழப்பு - கண்டியில் உச்சம்.

 



மத்திய மாகாண கொவிட்19 பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவின் தலைமையில் கூட்டம் இணைய வாயிலாக இன்று நடைபெற்றது.


இக்கூட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சின் பிரஜா சக்தி செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி மத்திய மாகாணத்தில் இதுவரை 1,063 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கண்டி மாவட்டத்தில் 697 மரணங்களும் நுவரெலியா மாவட்டத்தில் 190 மரணங்களும் மாத்தளை மாவட்டத்தில் 176 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 17 இலட்சத்து 43 ஆயிரத்து 469 கோவிட் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த வகையில் கண்டி மாவட்டத்தில் 839,303 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 96.4% ஆனோர் முதலாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து இரண்டாம் தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 வயதிற்கு குறைந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. அத்தோடு 2,560 நோய் தொற்றுக்கு இலக்கானவர்கள் ஆக இனம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 9,498 நோய் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். பிசிஆர் பரிசோதனை 4,198 மற்றும் என்டிஜன் பரிசோதனை 4,748 மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இங்கு ஏற்பட்டுள்ள 190 மரணங்களில் 81% 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும் 354,104 முதலாம் கட்ட தடுப்பூசிகளும் 95,743 இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. முதலாம் கட்ட தடுப்பூசிகள் 30 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் 91.52% வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்ட பகுதிகளில் மக்கள் மிகவும் ஆர்வமாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.

மேலும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெற்று தந்தமைக்காக அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் பிரஜாசக்தி செயற்திட்டத்தின் தன்னார்வ படையினருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தனர்.

மாத்தளை மாவட்டத்தில் இதுவரை 176 மரணங்கள் பதிவாகியுள்ளன. 3 லட்சத்து 33 ஆயிரத்து 466 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் நோய் தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மிகவும் அவதானமாகவும் முகக் கவசங்கள் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளிகளை பேணுதல் மற்றும் அத்தியாவசிய பயணம் தவிர ஏனைய பயணங்களை தவிர்த்தல் அருகே வழங்கப்படும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மக்கள் தவறாது பின்பற்றுமாறு பாரத் அருள்சாமி வேண்டுகோள் விடுத்தார்.

-மலையக நிருபர் கிரிஷாந்தன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »