தெஹிவளை-கல்கிஸை மாநகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட காட்போர்ட் சவப்பெட்டிகள் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்று அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர் செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில், தெஹிவளை-கல்கிஸை மாநகர சபையின் பிரியந்த சஹபந்துவின் யோசனைக்கு அமைவாக இந்த காட்போர்ட் சவப்பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
இந்த காட்போர்ட் சவப்பெட்டிகள் இதுவரையில் 4,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இலங்கையில் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய மரப்பலகையிலான சவப்பெட்டிகளின் விலை 25,000 முதல் 30,000 வரை காணப்படுகிறது.
இது தொடர்பில் சஹபந்து அவர்கள் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்தமையானது, இவ்வகையான காட்போர்ட் பெட்டிகளில் 100 கிலோ வரையான பாரத்தை தாங்கும் தன்மையுடையது.
முதலில் இந்த காட்போர்ட் பெட்டிகள் கொரோனா நோயாளர்களுக்காகவே உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது சுற்றுச்சூழலைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் இந்த பெட்டிகளையே கொள்வனவு செய்து வருகின்றனர்.
2020ஆம் ஆண்டின் ஆரம்பம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதிகளில் சுமார் 350 பெட்டிகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.