Our Feeds


Monday, August 2, 2021

www.shortnews.lk

முஷாரப் MP அவர்களே! ஹராமான மொட்டு உங்களுக்கு எப்போது ஹலாலானது ?

 



( பேருவளை ஹில்மி )


பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் அவர்களே! முன்னை நாள் அமைச்சர் ரிஷாட் பதிருதீன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்  தொடர்பாக தாங்கள் ஒரு காணொளியை வெளியிட்டு இருந்தீர்கள். 


இது சம்பந்தமாக ரிஷாட் பதுருதீன் பக்கம் பல நியாயங்களை தாங்கள் எடுத்த வைத்த போதிலும், சம்பவத்தை தாங்களும் ஒரு அரசியல் நோக்கத்தோடு, அல்லது சம்பவத்தை வைத்து தங்கள்  அரசியல் லாபம் தேடும் நாக்குடன், நீங்கள் தற்போது ஆளும் கட்சியுடன் சேர்ந்து எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு சரி என்பதை நிரூபிக்க முற்படுவதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


இலங்கையின் அரசியல் நிலவரத்தை பொருத்தவரை தற்போது ஆளும் கட்சியில் 100% இனவாதம் என்றால் எதிர்கட்சியில் 50%  இனவாதம். இவ்வளவுதான் வித்தியாஷம் இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதை விட நீங்கள் சேர்ந்திருப்பது உத்தம புத்திரர்களுடனும் அல்ல. எதிர் கட்சியில் இருப்பது நன்மாராயம் கூறப்பட்டவர்களும் அல்ல. 


அதாவது உண்மையில் ரிஷாட் பதுருதீன் பக்கத்தில் குற்றம் நடைபெற்றிருந்தால் நீதமான விசாரனை நடத்தி குற்றம் இழைத்திருந்தால் குற்றம் இழைத்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 


ஆனால் இதை வைத்து, இது தொடர்பாக தாங்கள் கூறும் சில அரசியல் விடயங்களை பற்றி தாங்களிடம் சுட்டிக்காட்டுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.


தாங்கள் இக் காணொளியில் SJB கட்சி தாங்களுக்கு செய்த அநியாயங்களை, தாங்கள் சுட்டிக் காட்டியதோடு, அதாவது  SJB கட்சியானது, ரிஷாத் பதிருதீன் அவர்களை கூட்டணியில் இருந்து நீக்கியது சரியானது அல்ல என்பதையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.


சந்தர்ப்பத்தைப்  பொருத்து, இது ஏற்றுக் கொள்ளக்கூடிய நடவடிக்கை அல்ல என்பதே உண்மை. அதில் மாற்றுக் கருத்தில்லை.


ஆனால் அவர் அவ்வாறு கூறும் விதமாக, அரசியலில் ரிஷாட் பதிருதீனின் அவர்களின்  இவ்வாறான மதிப்பையும் மரியாதையையும், நம்பிக்கையையும்,  இழக்கும் விதம் நடந்து கொண்டது தாங்களும் தாங்களின் சக உறுப்பினர்களும் என்பதே உண்மை.


அதேவேளை பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது, சஜித் பிரேமதாச அவர்கள் "அவர்களின் கட்சிக்காரர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" என்பது சம்பந்தமாகவும் தங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். 


உண்மையில் தாங்களின் கட்சிக்காரர்கள் செய்த துரோகம் குறித்து, நடந்தது கொண்ட விதம் குறித்து,

அவ்வாறான ஒரு பதிலை சொல்வதற்கு தாங்களே வழி செய்தீர்கள் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.        


ஐம்பத்து மூன்று நாட்கள் ரிஷாட் பதிருதீன் அவர்கள், UNP  அரசாங்கத்தை காப்பாற்றினார் என்பதையும், தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ரிஷாத் பதிருதீன் அவர்களின் பாராளுமன்ற  பதவியையும் பறிக்க  முற்பட்டது,  இன்று நீங்கள் சார்ந்திருக்கும் அரசு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் .


அரசு அதை பறிக்க முற்பட்ட போது தாங்கள் மௌனமாக இருந்ததையும் தாங்கள் மறந்து விட்டீர்கள் என நினைக்கின்றேன். 


அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை  SJP கட்சியினர் பாராளுமன்றத்தில் போர் தொடுத்து காப்பாற்றியதை தாங்கள் மறந்து விட்டீர்கள்.


ரிஷாத் பதிருதீன் அவர்களின் கைது தொடர்பாக SJB கட்சியினர் பேச வில்லை என்பதையும் அவரை விடுவிக்க முயற்சிகளில் கட்சியினர் ஈடுபடவில்லை என்பதையும் தாங்கள் சுட்டிக்காட்டி இருந்தீர்கள்.


அனைத்துக்கும் முதலாக ரிஷாட் பதிருதீன் அவர்களை கைது செய்து அநியாயமாக சிறையில் அடைத்து இருக்கும் நிலையில், நீங்கள் சார்ந்திருக்கும் அரசாங்கத்தை ஏன் கண்டிக்கவில்லை. பாராளுமன்றத்தில் ஏன் தாங்கள் இதற்க்கு போராட்டம் தடத்தவில்ல.


குறைந்த பட்சம் இதற்காக முஜீபுர் றஹ்மான்  கொழும்பில் நடாத்திய ஆர்பாட்டத்திலாவது  தாங்கள் கலந்து கொண்டீர்களா ?


நீங்கள்  சேர்ந்திருக்கும் அரசாங்கம் தான் இத்தனைக்கும் காரணம் என்பதை நீங்கள் உணர வில்லையா   என்பதையும் உங்களிடம் நான் ஒரு கேள்வி முன்வைக்கின்றேன். 


மேலும் அனைத்து குப்பைகளையும் SJB மீது கொட்டும் நீங்கள், ரிஷாத் பதியுதீனின் இன்றைய இந்த நிலைக்குக் காரணம் யார் என்பதையும் தாங்கள் மறந்து விட்டதை தங்களுக்கு பணிவுடன் ஞாபகப் படுத்துகிறேன்


இன்றைய 20ஆம் திருத்தச் சட்ட மூலத்திற்கு உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால், இன்று ரிஷாதின் குடும்பத்திற்கு இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.  இலங்கையில் நீதி என்பது சுதந்திரமாக இயங்கி இருக்கும். என்பதை தாங்கள் மறந்து விட்டீர்கள் என்பதையும்  நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


இத்தனையும் சிந்திக்காத நீங்கள் அனைத்து குப்பைகளையும் SJB கட்சியின் மீது  கொட்டி விட்டு முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்து, ஜனாஸாக்களை எரித்து, ஜனாஸா மீது பழி வாங்கிய அரசாங்கத்தை சாடி இருக்கும் நீங்கள், ரிசாத் பதிருதீனையும்  அவர்  அவரது குடும்பத்தையும் இவ்வாறு சித்திரவதை படுத்துவது தாங்கள் சேர்ந்து இருக்கும் கட்சி என்பதையும் தாங்கள் மறந்து விட்டீர்கள் என்பதை  இந்த இந்த இடத்தில் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.


மேலும் நீங்கள். தாங்கள் காணொளியில் இத்தனை குற்றச்சாட்டுக்களையும் SJB கட்சியின்  மீது சுமத்தி, நீங்கள் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு சரியானது தான் என்பதை நீங்கள் மக்களை ஏமாற்றி மக்களின் முன்  நிரூபிக்க முற்படுகிறீர்கள் என நினைக்கிறேன்.


மொட்டு ஹராம் , ஹராத்தின் பக்கம் நெருங்க்க கூடாது என, ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களிடம் வாக்குறுதிகளை வழங்கி, மக்களின் வாக்குகளைப் பெற்று 

தாங்கள் நினைத்தபடி நிலைப்பாடுகளை எடுக்க உங்களுக்கு என்ன உறிமை இருக்கின்றது.


ரிஷாட் பதிருதீனின் இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை வைத்து இவ்வாறான ஒரு அரசியல் இலாபம் தேட முற்படுவதை  தவிர்ந்து கொள்ள வேண்டும்   என்பதை  உங்களை நான் தாழ்மையாக கேற்க விரும்புகின்றேன். 


நீங்கள் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், உங்கள் எதிர்காலத்துக்கும் சரியாக இருக்கலாம்.


ஆனால் 20 திருத்தச் சட்டமூலத்திற்கு உங்கள் கட்சியினர் கை தூக்கி இந்த நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளை பறித்து.  இந்த நாட்டு சட்டத்தையும் திருத்தியமைத்து. இவ்வாறான அநியாயங்கள் நடக்க காரணமாக உங்கள்  கட்சியினரே  என்பதை தாங்கள் மறந்து விடக்கூடாது.


எனவே ரிஷாட் பதிருதீனுக்கும்  அவரது குடும்பத்திற்கும் ஏற்பட்டிருக்கும் ஒரு கஷ்டமான நிலையை வைத்து தாங்கள் இப்போது அரசியல் லாபம் தேட முனைவதை விட்டு விலக கொள்ளும்படியும் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதில் நீங்கள் அரசியல் லாபம் தேட முற்பட வேண்டாம் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 


நீங்கள் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு சரியான அரசியல் நிலைப்பாடு சரியானதே என குறிப்பிடாடிருந்தீர்கள்.


அமைச்சுப் பதவிகளுக்கு  பதிலாக மாவட்ட அபிவிருத்திப் பதவி உங்கள் அனைவர்க்கும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அபிவிருத்தி வெள்ளத்தில் நீந்தி நீராடிக் கொண்டிருக்கும் இந்த  உங்கள் அரசியல், உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், உங்கள் எதிர்காலத்துக்கும் சரியாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம் சமூகம் உங்களிடம் எதிர் பாத்தது இது அல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.


ரிஷாட் ஒரு தைரியமானவர்

சமூகப் பற்றுள்ளவர். சமூகத்திற்கு அநியாயம் நடக்கும் பொது கொதித் தெழுந்தவர் எனவே உங்களது சந்தர்ப்பவாத வங்கரோத்து அரசியலை ஒரு பக்கம் வைத்து விட்டு முன்னால் அமைச்சர் ரிஷாட்பதுருதீனுக்கா குரல் கொடுத்து அவரை விடுவிக்க முயற்சி செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »