ஆப்கானிஸ்தான் – காபூலில் நிர்க்கதிக்குள்ளான உக்ரேன் பிரஜைகளை அழைத்து செல்வதற்காக ஆப்கானிஸ்தானிற்கு வருகைத் தந்த விமானம் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலுள்ள உக்ரேன் பிரஜைகளை அழைத்து செல்வதற்கான கடந்த வாரம், அந்த நாட்டு விமானம் ஆப்கானிஸ்தான் நோக்கி பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வருகைத் தந்த விமானம், கடந்த ஞாயிற்றுகிழமை கடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
தமது பிரஜைகளை ஏற்றுவதற்காக வருகைத் தந்த விமானத்தை, வேறொரு தரப்பினர் கடத்தியுள்ளதாகவம் அவர் கூறுகின்றார்.
தமது பிரஜைகளை மீட்பதற்கான மூன்றாவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட விமானம், ஈரானை நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.