களனி பிரதேச செயலக காரியாலயத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இவர்களில் பிரதேச செயலாளரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் தற்போது கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு, இவர்களுடன் தொடர்பை பேணியவர்களை கண்டறியும் நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.