நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் நோயாளர்களால் நிரம்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் சுமார் 186 ICU கட்டில்கள் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், தற்போது அவை பற்றாக்குறையாக காணப்படுவதனால் ஏனைய நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 86 தீவிர சிகிச்சை பிரிவுக் கட்டில்களும் தற்போது கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.