ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கடந்த 21ம் திகதி கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் அறிவிக்கப்பட்ட கருப்புக் கொடி ஏந்துதல் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கத்தோலிக்க சபையின் அங்கத்தவரும், சமூக ஆர்வளருமான ஷெஹான் மாலக கமகே இன்று மாலை 04.00 மணிக்கு CID க்கு விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை ஷெஹான் மாலக கமகே அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன், அனைத்துக்கும் தயாராக இருக்கிறேன். நீதிக்காக கைகோர்த்துக் கொள்ளுங்கள் - கடவுளுக்கு மட்டுமே அஞ்சுகிறேன் எனவும் முகநூல் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.