Our Feeds


Monday, August 16, 2021

www.shortnews.lk

BREAKING: வார இறுதி நாட்களில் முழுநேர லொக்டவுன் உத்தரவு? அரசு தீவிர ஆலோசனை.

 



சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, சில வழிகாட்டல்களை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவித்தல், இன்று வெளியிடப்படவுள்ளது.


அதன்படி, குறித்த வர்ததமானியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சில சட்டங்கள் காணப்படுவதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போது நாடு முழுவதும் இன்று (16) முதல் தினமும் இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது.

நாட்டில் டெல்ட்டா வைரஸ் பரவல் காரணமாக நாளாந்தம் 150இற்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகிவரும் பின்னணியில் இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

இதேவேளை, , நாளை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதத்தை விடவும் அதிகரிக்காத எண்ணிக்கையிலானோருக்கு ஒன்றுகூட முடியும்.

எவ்வாறிருப்பினும், பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கோருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »