இலங்கையர்களுக்கு கொரோனா மூன்றாவது தடுப்பூசி அல்லது, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளாரென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல், கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இடம்பெற்றதாகவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, தற்போது சில நாடுகளில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாயின், எமது நாட்டிலும் அதனை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதனைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை உடனடியாக முன்வைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.