நாடு முழுவதும் 500 அல்லது 500இற்கு அதிகமானோர் அமரும் வகையிலான திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை சுழற்சி முறையில் கடமைக்கு அழைப்பது தொடர்பில் நிறுவனத் தலைவரே தீர்மானிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரச நிகழ்வுகள் அனைத்தும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்படுவதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு முழுமையான அளவில் முடக்கப்படாது எனவும் இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.