தான் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
தனக்கு ஒரு தடவை கொவிட் தொற்று உறுதியானது என்றும், மீண்டுமொரு முறை கொவிட் தொற்று ஏற்பட்டால் அது ஆபத்தானதாக இருக்கும் என்பதால் வைத்தியர்கள் கடுமையாக எச்சரித்ததால், அவர்களின் பணிப்பை ஏற்று தடுப்பூசி பெற்றுக்கொண்டேன் எனவும் அவர் அப்பதிவில் மேலும் தெரிவித்தார்.