பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், மெகஸின் சிறைச்சாலையில் மற்றுமொரு சிறை கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்குள் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டை அடுத்தே, ரிஷாட் பதியூதீன் இவ்வாறு வேறொரு சிறை கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, வைத்தியர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், சிறைச்சாலை நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைக்குள் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து, சிறைச்சாலை நீதிமன்றத்தினால் விசாரணை நடத்த முடியும் என திணைக்களம் குறிப்பிடுகின்றது. (TC)