கொரோனா மற்றும் டெல்ட்டா தொற்று தீவிரமாக பரவியுள்ள மேல்மாகாணத்தை உடனடியாக முடக்குவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் கொரோனா செயலணியிலும் ஆராயப்படவுள்ளது.
நாட்டை முற்றாக முடக்காமல், இப்போது கொரோனா மற்றும் டெல்ட்டா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் மேல்மாகாணத்தை மட்டும் முடக்குவதற்கும், மாகாணங்களுக்கிடையே மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாட்டை விதிக்கவும் தீவிரமாக ஆராயப்படுகிறது.
நாளை மாலை இது தொடர்பில் விசேட அறிவிப்பை விடுக்க அரசு எதிர்பார்த்துள்ளதாக அறியமுடிந்தது.