அண்மைக்காலமாக பொருள்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையானது, தற்போது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, இவ்வருட அரையாண்டு காலப்பகுதிக்குள் இரண்டு மற்றும் மூன்று தடவைகள் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளின் உணவுப் பொருள்கள், பெண்களுக்கான பொருள்கள், மருத்துவப் பொருள்கள் உட்பட அத்தியாவசியப் பொருள்களுக்கான விலைகளே இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளன என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
- வி.ரி.சகாதேவராஜா