Our Feeds


Tuesday, August 10, 2021

www.shortnews.lk

BREAKING: நாட்டை லொக்டவுன் செய்யும் எவ்வித தீர்மானமும் இதுவரை இல்லை - அரசாங்கம் அறிவிப்பு

 



நாட்டை முடக்குவதற்கு எவ்விதத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


கொரோனா நெருக்கடியைக் கையாள்வதற்கான இறுதி அஸ்திரமாகவே ஊடரங்கு உத்தரவு பயன்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா நெருக்கடியைக் கையாள்வதற்கு சிறந்த வழி தடுப்பூசி என்று தெரிவித்த அவர், கொரோனா நெருக்கடியைக் கையாளும்போது முடக்க நிலை தொடர்பான தீர்மானம் எந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்படும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும், வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

 முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும் என்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன நாட்டில், வைரஸ் பரவுவதற்கு இடமளிக்கிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

நாட்டை முழுமையாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம்  முழுமையாக நிராகரிக்கவில்லை. எனினும், தேவைப்படும் போது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

  கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இரண்டொரு வாரங்களுக்கு நாட்டை முழுமையாக மூடிவிடுதல் அல்லது பிற கட்டுப்பாடுகளை கடுமைப்படுத்துவதற்கான பரிசீலனைகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »