டெல்டா கொரோனா வைரஸ் திரிபினை காட்டிலும், வீரியமிக்க மற்றுமொரு கொரோனா வைரஸ் திரிபு பரவும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய வைரஸ் திரிபுகளை கண்டறிவதற்கான ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், புதிய வைரஸ் திரிபுகளை எதிர்கொள்வதற்கு அஸ்ட்ரா செனகா கொவிசீல்ட் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுகொள்வது போதுமானது என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
டெல்டா உள்ளிட்ட புதிய வைரஸ் திரிபுகளை எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்புடல் குறித்த தடுப்பூசிகள் மூலம் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.