நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 593 பேர் மருத்துவமனைகளில் செயற்கை ஒட்சிசனை பயன்படுத்தி உயிர்வாழ்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான பிரதான ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் நாட்டில் 272 கொரோனா நோயாளர்களுக்கு ஒட்சிசன் தேவைப்பாடு அவசியப்பட்டது.
இந்நிலையில் தற்போது அது 593ஆக அதிகரித்துள்ளதோடு, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து ஒட்சிசன் இறக்குமதி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.