உலகில் அத்தியாவசிய உணவுகளை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடங்களுக்குள் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது நாடு மிகவும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உலகில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது “அபி வவமு ரட நகமு” போன்ற வேலைத்திட்டங்களின் ஊடாக அதற்கு தீர்வு காணப்பட்டது.
ஆனால், இன்று அவ்வாறான ஒரு திட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை எனவும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார்.