Our Feeds


Monday, August 23, 2021

www.shortnews.lk

BREAKING: ரிஷாதின் வீட்டில் யுவதி மரணம்: ரிஷாதின் மனைவி உள்ளிட்ட 4 பேருக்கும் செப்டம்பர் 6 வரை மீண்டும் விளக்கமறியல்

 



முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான வழக்கின் ஐந்தாவது சந்தேகநபராக ரிஷாட் பதியூதீனின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.


அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட சந்தேக நபர்கள் 4 பேரையும் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஹிஷாலினி உயிரிழந்தமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு - புதுக்கடை நீதிமன்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »