Our Feeds


Friday, August 6, 2021

www.shortnews.lk

BREAKING: ஒரு நாளைக்கு 200 உடல்களை எரியூட்டும் வசதியை ஏற்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. - Prof. சுனேத் அச்சம்.

 



இலங்கையில் ஒரு நாளைக்கு 150-200 உடல்களை தகனம் செய்யக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.


இலங்கையின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டெல்ட்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு துணிச்சலான முடிவை எடுத்தது. இந்த சவாலின் ஒரு பகுதியாக ஒரு நாளைக்கு 150- 200 திறன் கொண்ட வெகுஜன தகனம் செய்யும் வசதியை உருவாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுனேத் அகம்பொடி, ரஜரட பல்கலைக்கழகத்தின் மருந்துவ பீடப் புற்றுநோயியல் துறை பேராசிரியரும் தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர் என அனைவராலும் நன்கு அறியப்பட்டவராவார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »