என்னை ஏப்ரல் 24ம் திகதி கைது செய்தார்கள். 5 நாட்கள் மட்டுமே விசாரித்தார்கள் இப்போது 102 நாட்களாகிறது. கடந்த 97 நாட்களாக எனது அறையை மூடிவைத்திருக்கிறார்கள். மலசல கூடம் செல்வதற்காக மட்டுமே அறையை திறக்கிறார்கள். இதுவரை எந்தவொரு விசாரனையும் நடத்தவில்லை.
எனது அமைச்சின் செயலாளராக இருந்த பாலசுப்ரமணியம் என்பவருடன் ஒன்றரை நிமிடங்கள் நான் தொலை பேசியில் உரையாடிமைக்காகத் தான் என்னை கைது செய்துள்ளதாக OIC கூறுகிறார். வேறு எந்த காரணங்களும் இல்லை.