சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவது போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் புகைப்படத்தில் இருப்பது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இல்லையெனவும், அது வேறு ஒருவரது புகைப்படம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது TikTok செயலியில் இருந்து பெறப்பட்ட புகைப்படம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தற்போது கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.