Our Feeds


Thursday, August 19, 2021

www.shortnews.lk

கடுமையான மருந்து பற்றாக்குறையின் மத்தியில் உயிருடன் விளையாடுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - சஜித் பிரேமதாச கடும் கண்டனம்.

 



19.08.2021


கொரோனா மற்றும் நிமோனியாவுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை உட்பட சுமார் 40 அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை நாட்டில் நிலவுவதாக அறியமுடிகிது.


இவற்றிலும்,குறிப்பாக  'டோசிலிசுமாப்'(Tocilizumab) என்ற மருத்து இல்லாததால், கடுமையான கொரோனா நோயாளிகளின் நிலை மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்குகின்றனர்.


விஷேட அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ் ஜயசிங்க மேற்குறிப்பிட்ட மருந்து இல்லாததன் காரணமாக காலமானார்.


அவர் இந்த நாட்டில் உருவாகிய மருத்துவர்களில் முதன்மையானவரும் பல மருத்துவர்களின் ஆசிரியராகவும் இருந்தார்.


⏹மே 4, 2021 இல் இந்த மருந்தின் பற்றாக்குறை குறித்து நாங்கள் முதலில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டோம், இது பாராளுமன்ற ஹன்சார்ட் அறிக்கையின் 81 ஆவது பத்தியில் சேர்க்கப்பட்டுள்ளது.


⏹நிலவியுள்ள மருந்துகளின் பற்றாக்குறை பற்றி பல சந்தர்ப்பங்களில் எங்களால் தெரிவிக்கப்பட்டதோடு இவை அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்தின் அவமதிப்புகள்,கோலிகள் மற்றும் புறக்கணிப்புகள் ஆகியவற்றை மட்டுமே சந்தித்தோம்.


⏹நாங்கள் ஒருபோதும் மருந்துகளை பரிந்துரை செய்யவில்லை என்பதோடு அது சுகாதார நிபுணர்களின் கருத்து என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தினோம் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.


⏹இந்த மருந்துகளின் பற்றாக்குறை பற்றி தெரிவித்து கடந்த  ஜூன் 4 ஆம் திகதி ஒரு விஷேட அறிவிப்பை வெளியிட்டதோடு, கடுமையான மருந்து பற்றாக்குறைக்கு தொழில்நுட்பக் குழு மூலம் தீர்வு காண அல்லது உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் காலம் தாழ்த்தாது உடனடி கவனம் செலுத்த  வேண்டும் என்பதை உரிய அறிவிப்பில் வலியுறுத்தியிருந்தோம். கடந்த செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்தில் இதை நாங்கள் கடைசியாக அரசாங்கத்திற்கு நினைவூட்டியபோது, அரசாங்கத்தின் ஆணவத்தைப் பயன்படுத்தி ஒரு அரசாங்க அமைச்சர் இதற்கு பொறுப்பற்ற பதிலைக் கொடுத்தார்.


⏹போலியான பானி பிரச்சாரகர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அமைச்சர்களாக இருக்கும் நாட்டில், அதன் சொந்த பிரதிநிதியாக இருக்கும் ஒரு அமைச்சரிடமிருந்து அதிக பொறுப்பான பதிலை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்களின் மனிதாபிமானமற்ற பொறுப்பற்ற தன்மையால் நாட்டில் உயிர்கள் இழக்கப்படும் வரை எங்களால் காத்துக்கொண்டிருக்க முடியாது. அரசாங்கம் கடவுளிடம் கடமை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் ஒப்படைத்துள்ளதால், இதன் விளைவாக இன்று கொரோனா இறப்புகளில் நம் நாடு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்பதாகும்.


⏹அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் ஏற்பட்ட கொரோனா பரவலுக்கான பழியை வன்முறையாக ஏனைய சாராருக்கு நகர்த்துவதற்கான அரசாங்கம் கேவலமான முயற்சியை மேற்கொள்கிறது ஆனால் கொரோனா பேரழிவின் தொடக்கத்திலிருந்து அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொறுப்பற்ற, பேராசை மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்முறை பற்றி தெரியாத ஒருவரும் இல்லை.


⏹ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பேரழிவின் ஆபத்துகள் குறித்து எங்களால் தெரியப்படுத்தப்பட்டாலும், ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்த அரசாங்கம் அது குறித்து எந்தக் கவனத்தையும் செலுத்தவில்லை.


⏹கொரோனா பேரழிவின் போது தேர்தல்களை நடத்துவதற்கு பதிலாக, அதை தோற்கடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும், அது குறித்து அரசாங்கம் எந்த வித கவனமும் செலுத்தவில்லை.


⏹இந்தப் பேரழிவுக்கு தீர்வு காண சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு ஒரு வருடத்துக்கும் மேலாக அரசாங்கத்தை நாங்கள் கோருகிறோம். வைரஸ் தீவிரமாக பரவி நாடு முழுவதும் விரிவடையும் வரை அரசாங்கம் பேரழிவு குறித்து கவனம் செலுத்தவில்லை.


⏹பாரம்பரிய எதிர்க்கட்சியின் வகிபாகத்தை முற்றிலும் நிராகரித்து முற்போக்கு எதிர்க்கட்சியின் மக்களுக்கான மனப்பான்மையுடன் பேரழிவை தோற்கடிக்க, வெறும் விமர்சனங்களுக்குப் பதிலாக அரசாங்கத்திற்கு ஆதரவுக் கரங்களை நாங்கள் பல முறை நீட்டியுள்ளோம். ஆனால் அரசாங்கம் தனியாக எல்லாவற்றையும் செய்ய முடியும் என்ற அகங்கார மனப்பான்மையுடன் எப்போதும் செயல்பட்டது. இன்றுவரை கூட, அதில் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை.


நாட்டில் தற்போது நிலவும் தீவிர சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சில நாட்களுக்கு நாட்டை முடக்க வேண்டும் என்பதையே அரசாங்கம் முதலில் மேற்கொள்ள வேண்டும்.


நாங்கள் இது குறித்து பல சந்தர்ப்பங்ளில் பல முறை அரசாங்கத்திடம் கூறியுள்ளதோடு, தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சூழ்நிலையின் அபாயத்தை தீவிரமாக கருத்திற்கொண்டு இது குறித்து மீண்டும் அரசாங்கத்திற்கு நினைவூட்டுகிறோம்.


எங்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளுக்கும் அரசாங்கம் சிரிப்பதால் நாட்டின் அப்பாவி மக்களுக்கு கண்ணீரே இழப்பீடுகளாக கிடைத்துள்ளது.


கொரோனா பரவல் மற்றும் இறப்பு அடிப்படையில் இலங்கை மற்ற அனைத்து நாடுகளையும் விஞ்சியுள்ளதோடு, அரசாங்கம் அதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட உத்தேசித்துள்ளதா என்று தெரியவில்லை.


சஜித் பிரேமதாச 

எதிர்க் கட்சித் தலைவர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »