இலங்கையின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, அது இந்தியாவில் ஏற்பட்ட மரணங்களை விட 10 மடங்கு அதிகம் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இலங்கயைில் தினமும் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒப்பிடும் போது அது இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்ககையில் தற்போது ஏற்பட்டு வரும் கொரோனா மரணங்கள், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த போது ஏற்பட்ட மரணங்களை விட அதிகம் எனவும் அங்கம்பொடி கூறியுள்ளார்.