இரவு நேரங்களில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று அநுராதபுரத்தில் இரவு நேரத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சாரதியை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை கொல்லையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.