Our Feeds


Wednesday, August 25, 2021

www.shortnews.lk

அத்தியவசிய பொருட்கள் விநியோகத்திற்கான போலி ஆவணங்களை தயாரித்த தெமடகொட, வெள்ளவத்தை பகுதி கும்பல் கைது.

 



(எம்.மனோசித்ரா)


கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் போலி ஆவணங்களை தயாரித்த ஒருவரும் அவருக்கு உதவிய மேலும் இரு இருவரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


மத்திய குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, பொரளை பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் அவற்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் ஒருவரும் போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு உதவிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து அச்சு இயந்திரம், ஸ்கேன் இயந்திரம், முத்திரை உபகரணம், போலியான அத்தியாவசிய சேவை முத்திரைகளைகளுக்காக வைக்கப்பட்டிருந்த 100 ரோனியோ கடதாசிகள், போலி இறப்பர் முத்திரை, வெவ்வேறு மாவட்ட செயலகங்களினால் வழங்கப்படுவதை ஒத்த போலியான 12 அத்தியாவசிய சேவைக்கான அனுமதிப்பத்திரங்கள், 2 கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29, 30 மற்றும் 46 வயதுடைய தெமட்டகொட, வெள்ளவத்தை மற்றும் ஆட்டுப்பட்டித்தெரு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்ளாவர். பொரளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »