Our Feeds


Thursday, August 5, 2021

www.shortnews.lk

கொரோனா மூன்றாவது தடுப்பூசி செலுத்துவதை நிறுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

 



இரு தடவைகள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துதலுக்கு மேலதிகமாக மூன்றாவது முறையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை நிறுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.


உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த செயற்பாடு மூலம் ஒவ்வொரு நாட்டிலும் 10 சதவீதமானோருக்கே கொரோனா தடுப்பூசிகளை செலுத்தக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் அவர் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகள் மூன்றாவது தடவையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளன.

எனினும், வறிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் அடிப்படையில் சில வறிய நாடுகளில் மொத்த சனத்தொகையில் 1.5 சதவீதமானோருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இறுதிவரை மூன்றாவது முறையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »