நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு, முன்னர் திட்டமிட்டவாறு செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான சாத்தியங்கள் இல்லையென கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரவித்தார்.
பெரும்பாலான கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வரை பாடசாலைகளை திறக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் தற்போது சுகாதார பிரிவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் இதன்போது தெரிவித்தார்.