முகக்கவசம் அணியாது நடமாடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இந்த வார இறுதி முதல் முன்னெடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.