இலங்கையின் உயர் பதவிகளிலுள்ள பலர் கொவிட் தொற்றுக்குள்ளாகி, தற்போது சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.
இதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோர் தற்போது கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்கவும் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 8 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புரவிற்கு நேற்றைய தினம் கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
நாட்டில் நாளாந்தம் 4000திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருவதுடன், 200ஐ அண்மித்த கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றன.
மேலும், கொவிட் தொற்று காரணமாக பல முக்கிய நபர்கள் கடந்த காலங்களில் உயிரிழந்திருந்தனர்.
கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவர் ராஜ் ராஜமகேந்திரன், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட முக்கிய நபர்கள் அண்மை காலத்தில் கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில், பொதுமக்களை உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார தரப்பு தொடர்ச்சியாக கோரி வருகின்றது.