Our Feeds


Wednesday, August 11, 2021

SHAHNI RAMEES

சுகாதார அமைச்சராக ரமேஷ் பதிரன ? 20 ஐ ஆதரித்த 2 முஸ்லிம் MP க்களுக்கும் அமைச்சுப் பதவி

 

சுகாதார அமைச்சு உள்ளிட்ட சில முக்கிய அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

அதன்படி, புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பதற்கும், வெளிவிவகார அமைச்சு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூக்கு வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கு மேலதிகமாக மின்சக்தி, சுற்றுலா, கல்வி, ஊடகம் ஆகிய அமைச்சுக்களிலும் மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு வழங்குவது குறித்தும் அரசு மேல்மட்டத்தில் ஆராய்ந்து வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »