Our Feeds


Wednesday, August 18, 2021

www.shortnews.lk

நாடு முழுவதும் வர்த்தக நிலையங்கள் பூட்டு – அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய அரசாங்கத்தின் மாற்று வழி

 



நாட்டிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டாலும், அனைத்து சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களை திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.


கொவிட் பரவலுக்கு மத்தியில், சுய தனிமைப்படுத்தலில் இருக்க அனைவருக்கும் உரிமை உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, சுய தனிமைப்படுத்தலுக்காக நாட்டின் பல பாகங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், உணவின்றி வாழ்வது சிரமமான விடயம் என கூறிய அவர், அதற்காக அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களை நாளாந்தம் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடுகின்றார்.

தமது விருப்பத்திற்கு ஏற்ப வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான அதிகாரம் உரிமையாளர்களுக்கு உள்ளதாகவும், அவ்வாறு மூடப்படும் வர்த்தக நிலையங்களை எந்தவொரு சந்தர்;ப்பத்திலும் பலவந்தமாக திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது எனவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புறக்கோட்டை முடக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »