தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் கொழும்பு மாவட்டத்திற்குள் நடமாடும் வியாபாரத்தின் ஊடாக பொருட்களை விற்பனை செய்பவர்கள் கட்டாயமாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டுமெனவும், அவ்வாறு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு குறித்த தொழிலில் ஈடுபட அனுமதி இல்லையெனவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் நடமாடும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களானால் அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.