இலங்கை இன்று ஒரு சிரேஷ்ட தலைவரை இழந்துவிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீர நாட்டை நேசித்தவர் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியொன்றின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மங்கள சமரவீரவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மங்களவின் மறைவு செய்தியை கேட்டு தான் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகவும், இலங்கைக்காக மங்கள ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.