கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானால் பெரும் சிக்கல் நிலையை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று பிரசவ நரம்பியல் விசேட வைத்தியர் அஜித் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வயிற்றிலிருக்கும் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் கட்டாயம் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பால் ஊட்டும் தாய்மார் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதன் மூலம் கூடுதலான பாதுகாப்பு கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.